விக்ரமா? ஜோவிகாவா? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை காலி பண்ணப் போறது யார் தெரியுமா?

இந்த வாரம் எவிக்‌ஷன் யாரு?

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 அக்டோபர் 2ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 1ம் தேதி வரை நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. 6 சீசன்கள் முடிந்த நிலையில், 7வது சீசன் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக தொடர்ந்து ரசிகர்கள் குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஒவ்வொரு வாரம் முடிவிலும் இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுகிறார்கள் அந்த எவிக்‌ஷன் சரியா? தவறா? என்கிற விவாதங்களும் அரங்கேறி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பங்கேற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அவர் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆனால் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவர் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

தப்பித்த ஜோவிகா

இந்த வாரம் கண்டிப்பாக ஜோவிகா விஜயகுமார் தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெளியான நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம் தான் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என இதுவரை காமெடி பண்ணி வந்தவர் இந்த வாரம் வெளியேற போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜோவிகா, கூல் சுரேஷ், பூர்ணிமா எல்லாம் எப்படி தப்பிக்கிறாங்க என்றும் அந்த ரவீனா தாஹா, அனன்யாவை எல்லாம் டபுள், ட்ரிபிள் எவிக்ட் ஆவது பண்ணி வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார ஷூட்டிங் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் ஷூட்டிங் முடியும் முன்பே சமூக வலைதளங்களில் எவிக்ட் ஆகப் போவது யார் என்பது வரை எப்படி கசிகிறது என்பதும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.