Connect with us

புரொமாஷனுக்காக பெயரை மாற்றி களத்தில் இறங்கிய விக்ரம், த்ரிஷா ! வேற லெவல் அப்டேட் !

ponni nathi 1

பொழுதுபோக்கு

புரொமாஷனுக்காக பெயரை மாற்றி களத்தில் இறங்கிய விக்ரம், த்ரிஷா ! வேற லெவல் அப்டேட் !

சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

ponniyin selvan actor-7

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது , இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக விக்ரம் மற்றும் த்ரிஷா படத்தில் அவர்கள் நடித்த கேரக்டர் பெயர்களை ட்விட்டரில் மாற்றியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும் , த்ரிஷா குந்தவை என்றும் பெயரை மாற்றியுள்ளார்கள். இவர்களைப் தொடர்ந்து படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களது பெயர்களை விரைவில் மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Untitled design 96

ரஜினிக்கு மகளாக நான் நடிக்கவே இல்லை.. டான் ஹீரோயின் கொடுத்த விளக்கம் !

இந்த படத்திலிருந்து புதிய அப்டேட்டாக ராட்சஸ மாமனே என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. பொன்னி நதி, சோழா சோழா, ராட்சஸ மாமனே என 3 பாடல்களின் லிரிக் வீடியோ இதுவரை வரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top