‘விக்ரம்’ பட ரிலீஸ் எப்போது?… இயக்குநரின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்!
விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இதில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
மார்ச் 3ம் தேதியோடு, விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவின் மூலம் தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில், லோகேஷ் ஆக்ஷன் சொல்ல பகத் பாசில் துப்பாக்கியால் சுடுகிறார் பின்னர் படக்குழுவினர் அனைவரும் இணைந்து ‘இட்ஸ் ஏ ராப்’ எனக் கூறும் வீடியோ வெளியாகி தாறுமாறு வைரலானது.
படத்தின் ரிலீஸ் தேதியை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, உலக நாயகன் தேதியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்” உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்” என்ற பதிவுடன் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
I am waiting with bated breath for our "Vikram" to release world over, in theatres on June 3rd 2022.#VikramFromJune3
நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்.https://t.co/1rDp6ro9yz
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2022
