
பொழுதுபோக்கு
‘விக்ரம்’ ரிலீஸ் தேதி மாற்றம் ? – கமல்ஹாசனின் ராஜதந்திரம் !!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தற்போழுது சென்னையில் உள்ள ஹயாத் ஹோட்டல் நடிகர் கமல்ஹாசனின் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் இந்த படத்தில் இடம்பெறும் பத்தல பத்தல பாடலில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்லை இப்பாலே என்ற வரிகளுக்கு சர்ச்சை எழுந்தது குறித்து பேசியபோது, ஒன்றியம் என்பதற்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன என தனக்கே உரிய பாணியில் பதில் கூறினார் கமல்.
இதைஅடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.
கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். அவரை சந்திக்கும்போதெல்லாம் எனக்கு நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவார். அந்த புத்தகங்களில் உள்ள கருத்துகள் திரைப்படத்தில் வந்தால் நன்றாக இருக்கும் என ஒரு ஆசான்போல் அறிவுரை கூறுவார். அவ்வளவுதானே தவிர, அவரது பிறந்தநாள் அன்று இத்திரைப்படத்தினை வெளியிடுவதற்கு காரணங்கள் இல்லை.
இந்த படத்தை கமல்ஹாசன் முதலில் படத்தை மே மாதம் 29ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். இதற்கு காரணம் கடந்த 1986ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அந்த தேதியில்தான் ரிலீசானதாம்.அந்த தேதி தனக்கு செட் ஆகாத நிலையில் தற்போது ஜூன் 3ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக கூறியிருந்தார் .இதற்கும் படத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனக் கூறினார்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் சமந்தா !!.. கியூட் ரியாக்ஷன் அள்ளுதே !!..
அன்று தான் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளாக அமைந்தது தற்செயலானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்ரம் 3 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா 3வது பாகத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தப் படத்தை லோகேஷ் இயக்குவதும் உறுதியாகியுள்ளது.
