Connect with us

வசூலில் மாஸ் காட்டும் விக்ரம் படம்: எத்தனை கோடி தெரியுமா?

Kamal Haasan 1 1

பொழுதுபோக்கு

வசூலில் மாஸ் காட்டும் விக்ரம் படம்: எத்தனை கோடி தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரைப்படமான விக்ரம் படமானது தற்போது கடந்த 25 நாட்களுக்கு மேலாக வசூலில் மாஸ் காட்டிவருகிறது. குறிப்பாக பாகுபலி, கேஜிஎப் 2 போன்ற படங்களின் சாதனையை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில் 10 நாட்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டைப்படைத்த விக்ரம் படமானது தற்போது உலகம் முழுவமும் இந்த படம் ரூ. 380 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Kamal Haasan s super special gift to Lokesh Kanagaraj check out the surprise 1654608659

அதோடு வருகின்ற நாட்களில் விக்ரம் படமானது 500 கோடியை நெருங்கும் என திரையுலக வல்லுநர்கள் கூறுகின்றனர். விக்ரம் சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் கார் மற்றும் நடிகர் சூர்யாவிற்கு வாட்ச் பரிசாக உலகநாயகன் வழங்கியுள்ளார்.

மேலும், விக்ரம் படமானது ஜூலை 8ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக் குழுவினர் அண்மையில் தெரிவித்துள்ளனர்..

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top