
பொழுதுபோக்கு
விக்ரம் படம் ஓடிடி ரிலீஸ்! ரசிகர்களை ஈர்க்கும் துப்பாக்கிகளுடன் புரொமோவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது.உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த படம்
வெளியாகி 25நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகியுள்ளது.
அந்த வகையில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடியில் வீட்டுக்குள்ளே அமர்ந்து படம் பார்ப்பது சிலரின் விருப்பமாக மாறியுள்ளது,அதனால் விக்ரம் படத்தின் ஓடிடி உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கையில் இருப்பதால் ஓடிடி வெளியீட்டிற்கான தேதி எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
விக்ரம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன், ‘டிஏஜிங் (deaging) தொழில்நுட்பம் மூலமாக கமலின் இளம் வயது தோற்றம் படத்தில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள்வந்தது. ஆனால், அவை எதுவும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இல்லை.
அந்தக் காட்சிகளை தயார் செய்து படத்தில் இணைப்பதற்குக் கால அவகாசம் இல்லாததால் படக்குழுவினர் அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், ஓடிடியில் வெளியாகும்போது கமல்ஹாசனின் இளம் வயது காட்சிகள் நிச்சயம் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வருகிற ஜூலை மாதம் 8-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துப்பாக்கிகளுடன் கமல் தோன்றும் புரொமோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாயகன் மீண்டும் வரார்.. 🔥😎 #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022
