
பொழுதுபோக்கு
விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்! வெளியானது ‘பத்தல பத்தல’ வீடீயோ பாடல் !
மாநகரம், கைதி, மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் வைத்து உருவாக்கிய படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
உலக அளவில் விக்ரம் திரைப்படம் ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. இதுவரை விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துவருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
விக்ரம் படத்தின் ஓடிடி உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கைபற்றியது , இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் இந்த மாதம் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் துப்பாக்கிகளுடன் கமல் தோன்றும் புரொமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தையை போல பூனையை கொஞ்சும் திவ்யா பாரதி! வீடியோ!
அடுத்ததாக தற்போழுது விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்துள்ள ‘பத்தல பத்தல’ வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
The most asked for #PathalaPathala Video PREMIERING NOW! 💥🔥🤩
➡️ https://t.co/Xl0CP8Zmh7@anirudhofficial @ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @iamSandy_Off @RedGiantMovies_ @spotifyindia#AandavarStep #Vikram pic.twitter.com/nw5TggFqp2
— Sony Music South (@SonyMusicSouth) July 1, 2022
