Connect with us

விக்ரம் படத்தை விமர்சித்து வாங்கி கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன்!

blue sattai

Entertainment

விக்ரம் படத்தை விமர்சித்து வாங்கி கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

vikram 1

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்கிடையே மிகவும் பிரமாண்டமாக வெளியான விக்ரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது என்று கூறலாம். இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் விக்ரம் படமானது முதல்நாள் உலக அளவிலான இமாலய வசூல் தகவல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

suriya vikram movie lokesh 1

இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. இதில் இந்திய அளவில் மட்டும் 35 கோடியே 25 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் 20.4 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

vikram 1 2

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள விக்ரம் படம் கைதி பட நடிகர்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில், அதே சாயலிலும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது லோகி யூனிவர்ஸ் என்றும் மல்டிவர்ஸ் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாஸ்டர் படத்தையும் தளபதி 67ல் இணைத்து விடுங்கள் என்றும் ரசிகர்கள் லோகேஷ் இடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விக்ரம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தையும், பாசிட்டிவ் விமர்சனத்தையும் கலந்து என்ன சொல்லணும் என்று தெரியாதவாறு ஒரே குழப்பத்தில் விமர்சித்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன் என அவரது விமர்சனத்தை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்ரம் படம் குறித்த மீம்களாக எடுத்துப் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

blue sattai vikram movie review

கைதியில வந்தவங்க விக்ரம்ல வராங்க இதுக்கு பேருதான் மல்டிவர்ஸ் கான்செப்ஃட்னு மகன் அம்மாவிடம் சொல்ல, இது என்னடா பெரிய மல்டிவர்ஸ், பாக்கிய லட்சுமி வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாருன்னு சீரியலில் நடக்கும் சங்கமங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீமை ஷேர் செய்து பதிலுக்கு விக்ரம் படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இதனால் நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top