Connect with us

விக்ரம் மாஸ் ஹிட்.. அப்போ இந்தியன் 2?

inidan 2

செய்திகள்

விக்ரம் மாஸ் ஹிட்.. அப்போ இந்தியன் 2?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

vik lo

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.200 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது.

இப்போ கமல் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு உற்சாகமான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் சீக்கிரமாவே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கமல் இரண்டு வேடங்களில் 1996 இல் வெளிவந்த இந்தியன் படத்தில் நடித்து இருப்பார். அந்த படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக அமைந்தது.

அதுவும் ஏ ஆர் ரகுமான் அவர்களுடைய இசையும் பின்னணி பாடல்களையும் ஷங்கர் அவருடைய இயக்கத்திலும் பிரம்மாண்டமான படம் இருந்தது. இந்த படத்தை லைகா புரோடக்சன்ஸ் தான் வெளியிடஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் அவர்களின் இந்த படத்தை தொடங்கிவிட்டதாக ஒரு சிக்னல் கொடுத்து இருக்கிறார்.

indian2 1 1596707504 1620644050

சிக்னல் அப்படின்னா அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருக்கும் பிக்ச்சர்ஸ் இந்தியன் 2 போஸ்டர் வைத்துள்ளார். இப்போ இதுதான் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்துல என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஏற்கனவே இந்தியன் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து இருந்தார் ஆனால் தற்போது இந்தியன் 2- விற்கு ரஹ்மானுக்கு பதில் அனிருத் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி! எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட்..

 

 

 

 

 

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top