
பொழுதுபோக்கு
அமெரிக்காவில் விக்ரம் விநியோகஸ்தர் வெளியிட்ட பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது.உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜூன் 2ம் தேதியே விக்ரம் படம் வெளியாகிறது. 500 திரையரங்குகள், 2000 ஸ்க்ரீன்கள் மற்றும் 4000 காட்சிகள் என அமெரிக்காவில் பெரியளவில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
உலகநாயகன் எனும் பட்டத்திற்கு ஏற்ப, உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்தி காட்டி விட வேண்டும் என தீர்மானித்து விட்டாரா கமல் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர்.அந்த அளவிற்கு படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 200 கோடி வரை வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விக்ரம் திரைப்படம் 300 முதல் 400 கோடி வரை வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரெமோ படத்தில் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை.. வேற யாரு தெரியுமா?
#Vikram roars past $1.5M with early sunday gross
Top 5 in USA this wknd#VikramHitlist #VikramInAction pic.twitter.com/wJGMFrilEr
— PrimeMedia (@PrimeMediaUS) June 5, 2022
