
Entertainment
அடி தூள்..! வசூலில் மரண மாஸ் காட்டும் ஆண்டவர்..எத்தனை கோடி தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் கடைசி 3 நிமிடங்களில் வரும் சூர்யாவின் காட்சியானது திரையரங்கை அதிர வைத்தது என்றே கூறலாம். ஏற்கனவே இந்த படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இதனை பூர்த்தி செய்யும் விதமாக விக்ரம் படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக வசூலில் மாஸ்காட்டு வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.300 கோடியை தாண்டி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும் சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூல்வேட்டைப்படைத்துள்ளதாக தெரிகிறது. அதோடு கேரளாவில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ்காட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பின் திறமையைப் பார்த்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீலி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இவருக்கு பாராட்டு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
