அஜித்துடன் போட்டி போட முடிவு செய்த விக்ரம்…. வெளியான அதிரடி தகவல்….

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது நாம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். அதேபோல் இந்த படத்திற்கு போட்டியாக எந்தவொரு தமிழ் படமும் வெளியாகவில்லை. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

valimaaa

இதனையடுத்து வலிமை படம் சோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்திற்கு போட்டியாக ஒரு முன்னணி நடிகரின் படம் ஒன்று வெளியாக உள்ளது. அந்த நடிகர் வேற யாரும் இல்லைங்க நம்ம விக்ரம் தான்.

மகான்

கோலிவுட்டில் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற படங்கள் மூலம் ஒரு டாப் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தற்போது மகான் என்ற படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசைக்கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் மகான் படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படம் வெளியாவதால் வசூல் பாதிக்கும் என நினைத்து பல படங்கள் பின்வாங்கி விட்ட நிலையில், தற்போது மகான் படம் ஓடிடியில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment