லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது.உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த படம் வெளியாகி 20நாட்களில் 365 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். பகத் பாசில், புஷ்பா படத்திலும் வில்லனாக தோன்றி சார் பட்டத்திற்கு மாஸ் டைலாக் பேசிய கலக்கி உள்ளார். 39 வயதான இவர் தனது கண்களுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர்.
ஃபஹத் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் விக்ரம் படத்தில் பகத் பாசில் அவர்கள் அமர் கேரக்டரில் நடித்திருப்பார்,அதில் நடிகை காயத்திரி மனைவியாக நடித்திருப்பார். இவர்களின் நடிப்பும் படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும்.
மேலும் இந்த கேரக்டரை டெவலப் செய்து ஒரு புதிய கதையை உருவாக்கஉள்ளாராம் லோகேஷ். ஏற்கனவே விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள அவர், அதில் தொடர்புள்ள இந்த அமர் கேரக்டரின் மற்றோரு பரிமாணத்தை அந்த கதையில் சொல்லலாம் .
இது அமரின் முந்தைய காலகட்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு இந்த கதையை இயக்குவார் என கூறப்படுகிறது .
‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?