
பொழுதுபோக்கு
கமலுடன் மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி! அனல் பறக்கும் இந்தியன் 2 அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்கிடையே மிகவும் பிரமாண்டமாக வெளியான விக்ரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது என்று கூறலாம்.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது. தற்போது 350 கோடி வசூலையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இந்த படத்தை பார்த்து முடித்துவிட்டு, “கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். லோகேஷ் கனகராஜின் பிரமிக்க வைக்கும் புதுவித ஆக்ஷன் திரில்லர் விக்ரம்” என கமல் உட்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக கமலும் உற்சாகமாக ஒரு செய்தியை அளித்தார். அது என்னவென்றல் , “நீங்களும் உங்களது சிலிண்டர்களை நிரப்பி தயாராக இருங்கள். நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி மீண்டும் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து மற்றும் கொரோனா தாக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலையே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு கமல் அனுப்பிய செய்தியின் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
புது தாலியுடன் நயன்தாரா.. வைரலாகும் லேட்டஸ் கிளிக்!
