News
ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்டர் செய்தது ஒரு தமிழரா? பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலத்தை கலக்கிய பிரபல ரவுடி விகாஸ் துபே, இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற தகவல் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கொலை, கொள்ள, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த ரவுடி விகாஸ் துபேவை சமீபத்தில் கைது செய்ய போலீசார் சென்றபோது விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் காவல்துறையினரை நோக்கி சுட்டனர். இதில் 8 காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் 7 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து விகாஸ் துபேவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்திய போது மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தனது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவனது கூட்டாளிகள் தப்பி செல்ல முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விகாஸ் துபேவை காவல்துறையினர் அழைத்து வந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்றான் விகாஸ் துபே. அப்போது காவல்துறையினர் விகாஸ் துபேவை என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில் இந்த என்கவுண்டரை வெற்றிகரமாக நிகழ்த்தியது எஸ்பி தினேஷ்குமார் என்றும் இவர் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது
