‘விஜய்சேதுபதி-மிஸ்கின்-தாணு’….பக்கா காமினேஷன்!! எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

தனது நடிப்பாலும் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று மக்கள் செல்வன் என்ற பெயரைப் பெற்று வலம் வருகிறார் விஜய் சேதுபதி. ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் எப்பாடுபட்டாவது சினிமாவில் கதாநாயகனாக வலம் வரவேண்டும் என்று காத்திருந்து தகுந்த பலனை பெற்று உள்ளார் விஜய் சேதுபதி. இதனால் ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் வெளியாகும் என்பது உண்மையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இவர் கடைசியாக கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இயக்குனராக மிஸ்கின்  பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்த திரைப்படம் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று காணப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment