விஜய்யின் வாரிசு படத்திற்கும் அஜித்தின் துணிவு படத்திற்கும் இப்படி ஒற்றுமையா? ஷாக்கிங் அப்டேட்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு பிசியாக நடந்து வருகிறது,இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது. இந்த படத்தில் விஜய் ஒரு மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வாத்தி படத்தில் தனுஷ் எழுதிய பாடலா ? சிக்கிரட் வைக்கும் தனுஷ்!

அதே நாளில் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திலும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளனவாம்,படத்தில் அஜித்தின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பழிவாங்கும் கதை தான் இந்த துணிவு திரைப்படம் , அஜித் ஒரு அப்பாவாக ரசிகர்களை கண்கலங்க வைக்கும் காட்சிகள் உள்ளனவாம்.

சென்டிமென்ட் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஆக்சன் காட்சிகளும் அனல் பறக்கும் என எதிர்பாக்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.