Connect with us

விஜய் பட வில்லன் நடிகருக்கு திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?

jpg 2

பொழுதுபோக்கு

விஜய் பட வில்லன் நடிகருக்கு திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா, சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா, அஜித் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜித் நடித்த ஆசை மற்றும் உல்லாசம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை பார்த்து அஜித், அவருக்கு தனது வாலி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

download 31

முதல் படத்திலேயே நடிகர் அஜித்தை ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, வாலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்காக அஜித் சூர்யாவிற்கு விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி எஸ்.ஜே.சூர்யா. இணைந்து குஷி படத்தை இயக்கினார். இப்படம் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்ததாக இயக்கிய படம் நியூ. இதில் அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ஹிட்டானது.

DLrmr7 VwAAXUhA

சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவை ஸ்பைடர் படம் மூலம் வில்லனாக களமிறக்கினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு வேறலெவல் வெற்றி கிடைத்தது அடுத்தடுத்து வில்லன் வாய்ப்பு குவிந்தது.

அதன்படி விஜய்யின் மெர்சல், சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.எஸ்.ஜே.சூர்யாவுக்கு தற்போது 54 வயது ஆகிறது.

தேசிய கொடி ஏற்றிய பிரச்சனையில் சிக்கிய நடிகர் சூரி! வறுத்து எடுக்கும் சமூக வலைத்தளம்!

இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அவரது குடும்பத்தினர் தற்போது பெண் தேடி வருகிறார்களாம். விரைவில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top