விஜய்யின் ‘வாரிசு’படத்தில் ஆடியோ லான்ச்… முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதே போல் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தி நடித்திருப்பதாக நடித்துள்ளனர்.

இதற்கிடையில் வருகின்ற 24-ம் தேதி இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். அதே சமயம் இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் மகேஷ் பாபு, நடிகர் ஷாருக்கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் கலந்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனையடுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக பனையூரில் உள்ள விஜய்யின் ரசிகர் மன்றத்தில் அவர்களுக்கு சிறப்பு டிக்கெட்டுகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.