விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ லான்ச்: எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய். இவர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் வெளியாகும் இப்படம் வருகின்ற ஜனவரி 12 வெளியாக உள்ளது. அதே போல் திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தட்டித்தூங்கியுள்ளது.

varisu 1 1

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதன் காரணமாக இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ரஞ்சிதாமே’ மற்றும் ‘தீ தளபதி’ ஆகிய 2 பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பம்பர் ஹிட் கொடுத்தது.

Varisu Sarathkumar Update

தற்போது ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, டிசம்பர் 24 ஆம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே துணிவு படத்தை விட வாரிசு படம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல கோடி வசூலித்து இருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.