விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டைட்டில் மற்றும் முதல் 3 போஸ்டர்கள் சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்து தரப்பிழுது 5ஆம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடை பெற்றுவருகிறது .
படத்தில் சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ,அதைத்தொடர்ந்து காமெடி காட்சிகள்,சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அடுத்த ஆண்டு பொங்க ரிலீஸாக உள்ளது
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றால் படத்தின் கதைக்களம் , சூட்டிங் ,நடிகர்களின் கதாப்பாத்திரம் போன்ற விஷயங்கள் மிக பாதுகாப்பாகவும் மறைவாக அமையும்.ஆனால் விஜய்யின் வாரிசு பட சூட்டிங் தொடங்கிய நாளில் இருந்து பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றது, முதலில் படத்தில் விஜய்யுடன் நடிகை குஸ்பு இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது , அடுத்ததாக விஜய் நடனமாடும் காட்சிகள் வெளியானது.
அந்த வகையில் மீண்டும் ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வாரிசு குழுவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இது படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி என்றும் கூறப்படுகிறது.
இந்தி இயக்குநருடன் இணையும் சூர்யா! புதிய படம் அப்டேட் !
கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரின் படங்களுக்கே இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா என கமெசெய்தும் வருகின்றனர்