தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யின் அடுத்த படம் வாரிசு. இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தெலுங்கில் மகரிஷி, நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் தமிழில் கார்த்தியை வைத்து தோழா போன்ற படங்களை இயக்கிய வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு .
தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது முறையாக இயக்கம் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா தவிர, இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சம்யுக்தா மற்றும் பலர் உட்பட பல முக்கிய நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும், மேலும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு வரிசுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் தமிழ் வசனங்களை விவேக் எழுதியுள்ளார். வாரிசு படத்தின் ஷெட்யூல் ஷூட் ஆகஸ்ட் 1 விசாகப்பட்டினத்தில் தொடங்க நடைபெற்று வருகிறது
தற்போழுது இந்த படத்தின் மாஸான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் பிரம்மாண்ட தொழில் அதிபரின் மகனாக நடிக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் என்றாலே விலை உயர்ந்த ஆடைகள் அணிவது வழக்கம் அதிலும் தொழில் அதிபரின் மகனாக நடித்தால் அதற்கு மேல் சொல்லவே வேண்டாம் .
நயன்தாராவின் சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? எந்தெந்த தொழில்களில் எவ்வளவு முதலீடு !
ஆனால் வாரிசு படத்தின் காஸ்டியூம் டிசைனர் விலை உயர்ந்த துணிகளை விஜய்க்கு தொடுத்த போது இது எல்லாம் வேண்டாம் . வெறும் 500, 1000 ரூபாய் இருக்கும் உடைகள் போதும் என்று சொல்லிவிட்டாராம். விஜய் பொதுவாக எளிமையானவர் என்பது நமக்கு தெரிந்ததே , ஆனால் படத்தில் எதற்கு எளிமையை கையாளுகிறார் என்பது கேள்வியாக உள்ளது.