ஹிந்தியிலும் வெளியாகும் விஜய்யின் வாரிசு திரைப்படம்! மாஸான அப்டேட்!

விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொங்கல் வெளியீடான வாரிசு படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வந்தவண்ணம் உள்ளது . இரண்டாவது தனிப்பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட் இதோ..

வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகும் என்பது சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆகும். இதனை தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுவரை, தயாரிப்பாளர்கள் இந்தியில் ஒரு போஸ்டரைக் கூட வெளியிடவில்லை. இந்தி பதிப்பு சங்கராந்திக்கு திரையரங்குகளில் வெளியாகுமா இல்லையா என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

மேலும் படத்தில் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, மகேஸ்வரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

படத்தின் அதிரடியான கிளைமாக்ஸை படமாக்க விஜய் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் ஹைதராபாத் செல்ல உள்ளனர், இது 10 நாள் படப்பிடிப்பு, மேலும் க்ளைமாக்ஸ் முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நோயால் அவதிபடும் சமந்தாவை பார்த்து தன்னம்பிக்கை வருவதாக கூறும் தயாரிப்பாளர் விக்ரம்!

மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ராஷ்மிகா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் படம் முடிவடையும், ”என்று சினிமா நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.