Connect with us

அடுத்தடுத்து இணையத்தை கலக்கும் வாரிசு படக்குழு ! வெளியான 30 நொடி டான்ஸ் வீடியோ !

22 62f7672e78e2d

பொழுதுபோக்கு

அடுத்தடுத்து இணையத்தை கலக்கும் வாரிசு படக்குழு ! வெளியான 30 நொடி டான்ஸ் வீடியோ !

விஜய்யின் ‘வாரிசு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப படம் என்று கூறப்படுகிறது, இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கயுள்ளதாகவும் , அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய் படத்திற்கு தமன் முதன்முறையாக இசையமைக்கிறார், விரைவில் முதல் சிங்கிள் டிராக்கை வெளியிட இசையமைப்பாளர் தயாராகி வருகிறார். தளபதி விஜய் மற்றும் வம்ஷி இணைந்து ‘வாரிசு’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடத்தி வருகின்றனர்.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

இதுவரை ‘வாரிசு’ செட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து, விஜய் படங்களிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதிகம் கசிந்த புகைப்படங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது.

vaarisu 1 2

இதையடுத்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பை வெளியாட்களை அனுமதிக்காமல் பாதுகாப்போடு நடத்தி வருகின்றனர். அதையும் மீறி விஜய்யும், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் சிவப்பு நிற உடையில் காதல் காட்சியில் பங்கேற்று நடனம் ஆடும் புகைப்படம் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த காட்சியை திருட்டுத்தனமாக படம் பிடித்து வெளியிட்டவர் யார் என்று படக்குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

அல்லு அர்ஜுனுக்கு போட்டியாக களமிறங்கிய விக்ரம் ! ரசிகர்களை மிரட்டிய வைரல் வீடியோ!

unnamed 15

மேலும் தற்போது அந்த பாடலின் சில நொடி வீடியோவே லீக் செய்துள்ளனர். தொடர்ந்து 26 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top