பொங்கல் ரிலீஸை உறுதி செய்த விஜய்யின் வாரிசு படக்குழு! படப்பிடிப்பு குறித்து அப்டேட்!

தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார், இந்த படம் குறித்து ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் பலர் அடங்கிய துணை நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். மெகா நட்சத்திர நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் ஒரு அங்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இருமொழி படமாக இருக்கும். இது பான்-இந்தியா திட்டமாக இருக்கும் மற்றும் விஜய் தெலுங்கில் முதல் முறையாக படமாக்குகிறார்.

சமீபத்தில் வாரிசு படப்பிடிப்பில் இருந்து தளபதி விஜய்யுடன் ஒரு புதிய செல்ஃபி படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ராஷ்மிகா.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4-ம் தேதி அல்லது 11-ம் தேதி நடைபெற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழுவுடன் செல்ஃபியை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்! மாஸ் அப்டேட்!

இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.படப்பிடிப்பு இறுதி ஷெட்யூலில் முக்கிய நடிகர்கள் நடிக்கும் முக்கிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

மேலும் இன்று தொடங்கும் படப்பிடிப்பு இரண்டு சண்டை காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் கட்சிகளுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment