Connect with us

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி யாரு தெரியுமா? 13 ஆண்டு கழித்து இணையும் வெற்றி கூட்டணி!

பொழுதுபோக்கு

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி யாரு தெரியுமா? 13 ஆண்டு கழித்து இணையும் வெற்றி கூட்டணி!

தளபதி விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தற்போழுது ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிந்து படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

vijay lokesh

இந்நிலையில் தளபதி 67 படத்தில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது

படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 3 வில்லன்கள் இன்னும் தேர்வு செய்யாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

download 24

தற்போது விஜய் 67வது படத்தின் லொகேஷன் பார்ப்பதற்கு லோகேஷ் கனகராஜ் மும்பைக்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. இப்படம் மும்பை பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

vijay trisha

இந்த நிலையில் தளபதி – 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. முக்கிய வேடத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

திருமணத்திற்கு பின் கெத்து காட்டும் நயன்! கோடிக்கணக்கில் உயர்த்திய சம்பளம்!

 

இந்த தகவல் உண்மையாக இருபின் குருவி படத்துக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். முன்னதாக அவர்கள் கூட்டணியில் கில்லி, சிவகாசி போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top