
Entertainment
விஜய்யின் பருப்பு ஆந்திரா தயாரிப்பாளரிடம் வேகல போல ?? அப்படி என்ன நடந்தது !!!
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் படு தோல்வியை தொடர்ந்து விஜய்யின் புதிய படத்தை பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்குகிறார், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்கிறார்.
இதில் விஜய் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, மற்றும் நடிகர் ஷாம், சரத்குமார், யோகிபாபு போன்றவர்கள் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இதே போல போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறார்.
இந்நிலையில் பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.நடிகர் அஜித் குமார் தொடர்ந்து ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்துவதால் , தமிழகத்தில் உள்ள பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.
வங்கக் கடலில் உருவாகிறது ‘அசானி’ புயல்: எப்போது தெரியுமா ?
இதை தெரிந்து கொண்ட நடிகர் விஜய், தன்னுடைய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்றினார் தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என திட்டமிட்டு,விஜய் தரப்பில் இருந்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பை தமிழ்நாட்டுக்கு மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றால் அதிக செலவாகும், அதனால் தான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துகிறோம் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளனர்,ஆனால் தொடர்ந்து விஜய் படத்தை தமிழகத்திற்கு மாற்றினால் அங்குள்ள தொழிலார்களுக்கு வேலை கிடைக்கும் என தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
‘காலத்துக்கும் நீ வேணும்’… இன்று மாலை சிம்பு பாடல் வருதா ??
தமிழகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் படத்தில் விஜய் நடிக்கும் போது, விஜய் என்ன சொல்கிறாரோ அதை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றும், ஆனால் ஆந்திரா தயாரிப்பாளரிடம் விஜய் பருப்பு வேகவில்லை என, விஜய் மரியாதையை இழந்தது தான் மிச்சம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர்.
