தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார், அதற்க்கு அடுத்ததாக மாஸ்டர் இயக்குனர் லோகேஷ்வுடன் மீண்டும் ஒரு கூட்டணியில் இணைய உள்ளார். விஜய்யின் 66வது படமான வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் விஜய் அடுத்து அவரது 68 வது படம் குறித்து ஆர்வமாக ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். தற்போழுது விஜய்யின் 68வது டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக செய்தி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.அவர் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் டான் படத்தை இயக்கும் போதே விஜய்யை சந்தித்து கதை சொல்லியதாகவும் அதற்கு விஜய் ஓகே பண்ணியதாகவும் தகவல் வருகின்றன. இதை அறிந்த சிபி சக்ரவர்த்தி தற்போழுது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் டான் படத்தை தொடர்ந்து அடுத்த்தாக புதிய படத்திற்கான கதையை தற்போது தயார் செய்து வருவதாகவும் இந்த கதை பணிகள் முடிவடைந்த பிறகுதான் இதற்கு யார் பொருத்தமான ஹீரோவாக இருப்பார்களோ அந்த நடிகரை சந்தித்து கதை சொல்லி கால்சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
10 நாட்கள் சைவத்துக்கு மாறும் ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் பதிவு!