விஜய்யின் 67 வது படத்தில் பிரேமம் பட ஹீரோவா? லோகேஷின் அல்ட்டிமேட் காமினேஷன் !

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு,லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டத்தில் இளையதளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் மற்றும் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிகையுள்ளார்.

அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்! துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது தெரியுமா?

மேலும் “தளபதி 67” இல் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் ஆறு வில்லன்களும் தோன்றுவார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் கதையில் ஒரு வித்தியாசமான கட்டத்தில் விஜய்யை எதிர்கொள்வார்கள்.

அதற்காக சஞ்சய் தத், பிருத்விராஜ் , விஜய் சேதுபதி, கவுதம் மேனன் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் படத்தில் முக்கியமான பாத்திரங்களுக்கு அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.அதில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகி உள்ளது.

சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி!

ஆனால் பிரித்விராஜ் கால்சீட் இல்லாத காரணமாக விஜய்- 67வது படத்தின் வாய்ப்பை தவற விட்டுள்ளார்.அந்த வாய்ப்பை மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.