சிவாஜி சொன்ன வார்த்தையினால் தன் முடிவை மாற்றிக் கொண்ட விஜயகுமாரி! அப்படி என்ன நடந்திருக்கும்..

அந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக வாழ்ந்து வந்துள்ளார். தான் ஹீரோவாக நடிக்கும் படங்களிலும் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களையும் நடிகர் திலகம் சிவாஜி மிகவும் மதிப்புடன் நடத்துவார் என பல தகவல்கள் வெளியானதுண்டு. அதேபோல் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் நடிப்பின் இயல்பு தன்மையை கற்றுக் கொடுப்பது அவர்களை முறைப்படுத்தி நடிக்க வைப்பது என பல தத்ரூபமான அறிவுரைகளை சிவாஜி கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் நடிகை விஜயகுமாரிக்கு நடிகர் திலகம் சிவாஜி ஒரு வாழ்க்கை கூறி படத்தில் நடிக்கும்படி தைரியம் கொடுத்துள்ளார். அது எந்த படம் என்ன கதாபாத்திரம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏ சி திரலோக சந்தர் இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நானும் ஒரு பெண். இந்த படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் விஜயகுமாரி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் வாய்ப்பு முதலில் விஜயகுமாரிக்கு வந்த பொழுது அவர் அந்த படத்தில் நடிக்க மிகவும் தயக்கத்தில் இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் கதாநாயகி மிக கருப்பு நிற தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும். அதாவது மிகவும் கருப்பான ஒரு பெண் கதாநாயகியாக நடிக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் கருப்பு நிற முகச்சாயங்களை தன் முகத்தில் பூசி நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த படத்தின் நிபந்தனை. இதை தெரிந்து கொண்ட விஜயகுமாரி படத்தில் நடிக்க வேண்டுமா இல்லையா என்ற பல குழப்பத்தில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவரை சுற்றியுள்ள அவரது நண்பர்களும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் உனது சினிமா மார்க்கெட் விளக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அவரை சுதாரித்தும் வந்துள்ளனர். இப்படி குழப்பத்தில் இருந்த விஜயகுமாரியை நடிகர் சிவாஜி ஒருமுறை சந்தித்துள்ளார். அப்பொழுது நடிகர் சிவாஜி எந்த படத்திற்காக நீங்கள் மேக்கப் போடப் போவதாக நடிகர் விஜயகுமாரி இடம் கேள்வி கேட்டுள்ளார்‌. அதற்கு விஜயகுமாரி நானும் ஒரு பெண் எனும் படத்தில் நான் நடிக்க உள்ளேன் என தயக்கத்துடன் இரு மனதாக கூறினார். அதைக்கேட்ட சிவாஜி உன்னை பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. நான் மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ஏ வி எம் செட்டியாரிடம் சென்று நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருப்பேன். எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுங்கள் என அவரிடம் சண்டை கூட போட்டிருப்பேன்.

அதுமட்டுமில்லாமல் நடிகை விஜயகுமாரியை பார்த்து விஜி இந்த கதாபாத்திரம் உனக்கு நல்ல பெருமையை தேடித் தரும். அதனால் நீ பயப்படாமல் இந்த படத்தில் நடிக்கலாம் என கூறி வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சிவாஜி. உடனே நடிகை விஜயகுமாரியும் சிவாஜி அவர்கள் கொடுத்த தைரியத்தில் அந்த படத்தில் நடித்துள்ளார். அதன்பின் நடிகர் திலகம் சிவாஜி கூறியபடியே இந்த திரைப்படம் வெளியாகி நடிகை விஜயகுமாரிக்கு பிளாக்பஸ்டர் கிட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?

அது மட்டும் இல்லாமல் மத்திய அரசின் வெள்ளி பதக்கமும் இந்த படத்திற்கு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை விஜயகுமாரிக்கு பல ரசிகர்களிடம் கடிதம் அடுத்தடுத்து வந்துள்ளது. அதில் ஒரு ரசிகை நானும் இந்த படத்தில் நீங்கள் நடித்தது போல கருப்பான நிறத்தில் இருக்கும் பெண்தான். என் கணவர் என் கருப்பு நிறத்தை பார்த்து என்னை ஒதுக்கி வைப்பார். ஆனால் இந்த படத்தை பார்த்ததற்கு பின் என் கணவர் என்னுடன் அன்பாக இருந்து வருகிறார் என்று மிக மகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

நடிகை விஜயகுமாரி நடித்த ஒரு படத்தின் மூலமாக அவரது ரசிகர்களிடையே பல மாற்றங்கள் ஏற்பட்டது அவருக்கு பல விருது கிடைத்ததற்கு சமமாக அமைந்தது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் நடிகர் சிவாஜி அவர்கள் மட்டுமே. நடிகர் திலகம் மட்டும் நடிகை விஜயகுமாரிக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு படம் வெளியாகி இருக்காது. இந்த தகவலை நடிகர் விஜயகுமாரி அவர்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.