Connect with us

விஜயகாந்த் பிறந்தநாள்: ஸ்டாலின்,இபிஎஸ் வாழ்த்து!!

vijayakanth dmdk

தமிழகம்

விஜயகாந்த் பிறந்தநாள்: ஸ்டாலின்,இபிஎஸ் வாழ்த்து!!

தமிழகத்தில் 90 ஹிட்ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் நடித்த அனைத்து படங்களும் பம்பர் ஹிட் கொடுத்த நிலையில் பின்னர் அரசியலில் கால் பதித்தார். அதன் படி, கடந்த 2009-ம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத்தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றது.

பின்னர் 2011-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. இந்நிலையில் தேமுதிக தலைவர் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான திரு. விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அதே போல் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அவர்கள் இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு.விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top