விஜயகாந்த் ஆடிய முதல் டிஸ்கோ டான்ஸ்-பெண்டு நிமிர்த்திய பிரபுதேவா

திரையில் அந்தகாலம் முதல் இன்று வரை ஒரு சில நடிகர்களே டான்ஸ் மூவ்மெண்டில் பட்டையை கிளப்புவார்கள்.

அந்தக்காலத்தில் இருந்து இன்று வரை கமல், பின்பு ஆனந்த்பாபு, சிம்பு, தனுஷ் என ஒரு சில நடிகர்களே டான்ஸ் பக்காவாக ஆடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாக்யராஜ் நடனம் ஒரு மாதிரியாகவும் விஜயகாந்தின் நடனம் ஒரு மாதிரியாகவும் இருந்தது 80ஸின் முன்னணி  நடிகர்கள் பலரும் டான்ஸ் ஆட தெரியாத தெரிந்த மூவ்மெண்ட்டை மட்டுமே செய்து சென்றனர்.

அந்த வகையில் விஜயகாந்த் நடித்த பரதன் படத்தில் பானுப்பிரியாவுடன் விஜயகாந்த் ஆடிய நடனம் புகழ்பெற்றது.

இந்த பாடலுக்கு விஜயகாந்த் இளம் நடிகர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நடனம் ஆடினார். புன்னகையில் மின்சாரம் என்ற இந்த பாடல் விஜயகாந்த் டான்ஸ் ஆடிய பாடல்களில் முக்கியமான முதன்மையான பாடல் என்றே சொல்லலாம். கடினமான நடன அசைவுகளை பானுப்பிரியாவும் , விஜயகாந்தும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பர்.

இளையராஜா இசையில் அவரும் ஜானகி அவர்களும் பாடிய இந்த பாடலும் கேட்க அருமையாக இருக்கும்  பார்க்க கேட்க என்றும் இனிமை நிறைந்தது இந்த பாடல்.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்தது வேறு யாருமல்ல இயக்குனரும் நடன இயக்குனருமான பிரபுதேவா என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை எஸ்.டி சபா இயக்கி இருந்தார். 1992ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...