அப்படி ஒரு தங்க மனசு.. பிரபல இசையமைப்பாளர் மனைவியிடம்.. மனமுடைந்து மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்..

தமிழ் சினிமாவில் இனி இவரைப்போல ஒரு நல்லவரை பார்க்க முடியுமா என்ற அளவுக்கு வாழ்ந்து மறைந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக தமிழ் சினிமாவில் விளங்கினாலும் அந்த இடம் அவருக்கு மிக எளிதாக கிடைத்துவிடவில்லை.

நடிகராக வேண்டுமென ஆயிரக்கணக்கில் மக்கள் கனவு கண்ட நிலையில் அவரைப் போல ஒருவராக சினிமாவுக்குள் நுழைந்த விஜயகாந்த் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி இருந்தார். அப்படி ஒரு முன்னணி நாயகராக உயர்ந்ததற்கு மத்தியில் பட்ட கஷ்டங்களும், கடந்து வந்த விஷயங்களும் ஏராளம்.

தொடர்ந்து எந்த அளவுக்கு சினிமாவில் அவமானங்களை சந்தித்தாரோ அதனை யாருக்குமே செய்யாமல் இருந்த விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாமல் தவித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார். இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் தமிழ் மக்கள் மத்தியில் நெஞ்சத்தில் வாழக்கூடிய உன்னதமான மனிதராக இருந்தாலும் ஏனோ காலம் அவரை மிக விரைவில் எடுத்துக் கொண்டது.

விஜயகாந்தின் மறைவின் சமயத்தில் அவரைப்பற்றி ஏராளமான பிரபலங்கள் நிறைய உருக்கமான விஷயங்களை பகிர்ந்திருந்தனர். அது போன்ற செய்திகளை படித்த போதெல்லாம் இவர் போன்று ஒரு நல்ல மனிதர் தமிழ் சினிமாவில் இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்று தான் வியப்படைய வைத்திருந்தது.

இதனிடையே இசையமைப்பாளரான பரணி மற்றும் அவரது மனைவியிடம் விஜயகாந்த் மன்னிப்பு கேட்டது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். விஜயகாந்த், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் பெரியண்ணா. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் பரணி. இந்த படத்தில் விஜய் பாடல் ஒன்றை பாடி இருந்த நிலையில், விஜயகாந்தை வைத்து ஒரு பாடலை பாட வைக்க வேண்டுமென பரணி விருப்பப்பட்டுள்ளார். ஆனால், பெரியண்ணா படத்தின் மூலம் அது கைகூடவே இல்லை.

இதனிடையே, தனது திருமணத்திற்கு அழைப்பதற்காக விஜயகாந்தின் அலுவலகம் சென்றுள்ளார் பரணி. ஆனால், விஜயகாந்த் அங்கே இல்லாத சூழலில் திருமண பத்திரிக்கையை கொடுத்து விட்டு வந்துள்ளார். இதற்கிடையே பரணி திருமணத்தில் விஜயகாந்தால் கலந்து கொள்ள முடியவில்லை.

அப்படி இருக்கையில், பரணியும் அவரது மனைவியும் ரெக்கார்டிங் பணிக்காக ஸ்டூடியோ ஒன்றில் இருந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட விஜயகாந்த், நேரடியாக ஸ்டூடியோவுக்கு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், பரணியிடமும், அவரது மனைவியிடமும் கையை பிடித்து திருமணத்திற்கு வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் விஜயகாந்த்.

பரணி என்ற ஒரு புது இசையமைப்பாளருக்காக இப்படி ஒரு மனசுடன் விஜயகாந்த் ஏங்கி போய் மன்னிப்பு கேட்டது, பலரையும் ஒரு நிமிடம் நெகிழ தான் வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...