தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.டாக்சி வாலா ,டியர் காம்ரேட் என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போழுது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா விரைவில் லிகர் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.
விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
படத்தின் 3வது பாடலான ஆஃபத்தின் ப்ரோமோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். காதல் பாடலின் ப்ரோமோவில் எந்த ஒரு வார்த்தையும் இல்லை, ஆனால் இனிமையான பின்னணி இசை உள்ளது. இந்த பாடல் முன்னணி ஜோடிக்கு இடையேயான காதல் ட்ராக்காக இருக்கும். விஜய் தேவரகொண்டாவும் அதை தனது சமூக சுயவிவரங்களில் பகிர்ந்துள்ளார்
பொன்னியின் செல்வன்- ‘பொன்னி நதி’ பாடல் மேக்கிங் வீடியோ!
படத்தில் அனன்யா பாண்டே மற்றும் முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில், விஜய் ஒரு எம்எம்ஏ போராளியாக நடிக்கிறார்,விஜய்யின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, கதாநாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.
There's always a beautiful drama Queen who will come between a mother and son!#Aafat 💞
Song Tomorrow at 4 PM!#FirstOnTwitter #Liger pic.twitter.com/2gBp7QWiF7
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 4, 2022