தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13-ஆம் தேதி வெளிவந்த நிலையில் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களும் பல திரையுலக பிரமுகர்களும் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் தளபதி விஜய் அவர்கள் ’மாஸ்டர்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்த தகவல் தற்போது மூன்று நாட்களுக்கு பின்னர் தெரிய வந்துள்ளது
தேவி திரையரங்கிற்கு விஜய் அவர்கள் வந்தபோது அவரை திரையரங்கு உரிமையாளர்கள் வரவேற்று திரையரங்குக்குள் அனுப்பி வைக்கும் வீடியோ காட்சி தற்போது விஜய் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 13-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய காட்சியை விஜய் அவர்கள் பார்த்து ரசித்துள்ளார் என்பதும் அவருடன் அவருடைய குடும்பத்தினரும் பார்த்து உள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது
’மாஸ்டர்’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்த விஜய் குறித்த வீடியோவை பார்த்துஅவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த படம் ஏற்கனவே உலக அளவில் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே
Thalapathy Vijay watched #MasterFilm FDFS at Devi Theatre. #MasterPongal @actorvijay #VijayTheMaster
pic.twitter.com/OB3vGD06Rv— Actor Vijay Fans Page (@ActorVijayFP) January 15, 2021