விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்ற விஜய்! ரிட்டன் எப்போ தெரியுமா?

நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தனது 67வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்துள்ளது.மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் புரொமோசன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் தமிழ் நடிகர்கள் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தியில் உள்ள டாப் நடிகர்களை எல்லாம் லியோ படத்தில் களம் இறங்கியுள்ளனர். மேலும் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க உள்ளார். லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். படத்தின் முழு கதை உருவாக்கத்தில் வெங்கட் பிரபு தற்பொழுது தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதை தொடர்ந்து விஜய் முன்னணி பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார். நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் விஜய் இணைந்து படம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய்.

அது மட்டும் அல்லாமல் அவ்வப் போது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். அடுத்தடுத்து படப்பிடிப்பு மற்றும் அரசியலில் பிசியாக இருக்கும் விஜய் தற்பொழுது ஒய்வு எடுக்க விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பு திரும்பி வருவார் என தகவல் கிடைத்துள்ளது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...