Tamil Nadu
காணாமல் போன குமரி மீனவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய் வசந்த் எம்பி!
சமீபத்தில் டவ் தேவ் புயல் காரணமாக 21 மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 21 மீனவர்களை தேடும் பணியில் கடந்த சில நாட்களாக மீட்பு படையினர் ஈடுபட்டு இருந்த நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை
இதனையடுத்து காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க இருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காணாமல் போன 21 மீனவர்களில் 16 மீனவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் வீசிய புயலில் காணாமல் போனதை அடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் 16 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் வீசிய புயலில் கடலில் காணாமல் போனதை அடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு @iamvijayvasanth அவர்கள் 16 மீனவர்கள் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #TNCongressWithPeople pic.twitter.com/66niZlc6Lc
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) June 3, 2021
