பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா? கடைசியில் செம ட்விஸ்ட்!

பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறி வருவது போல வர வர கொஞ்சம் அல்ல ரொம்ப போர் அடித்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸே அதை வெளிப்படையாக சொல்லி பிக் பாஸ் போட்டியாளர்களிடையே தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட்டான போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 ஆண்டுகளாக உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த சீசனில் ஏகப்பட்ட தெரிந்த முகங்களும் இளம் போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் அடித்து ஆடி விளையாடி வரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிஜமாகவே கைகலப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

இந்த வார எவிக்‌ஷன் யாரு?

கடைசி போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் நுழைந்தவர் தான் விஜய் வர்மா. கடைசியாக வந்து முதல் வாரம் கேப்டனாக மாறினார். ஆரம்பத்தில் இருந்தே சண்டை போட்டு குரலை உயர்த்தி விளையாடினால் தனக்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என தப்பாக புரிந்து கொண்டார்.

F89ETwNasAAV9ew 1

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்து தன்னை ஒரு டான் போலவே கருதி சுற்றிக் கொண்டு இருந்த விஜய் வர்மாவுக்கு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே யெல்லோ கார்டு கொடுத்து எச்சரிக்கை விடுத்த நிலையிலும், தொடர்ந்து தனது ரவுடிசத்தை இந்த வாரம் டாஸ்க்கில் காட்டி பலமாக பிரதீப் ஆண்டனி, விஷ்ணு உள்ளிட்ட சில போட்டியாளர்களை தாக்கி இருந்தார்.

விஜய் வர்மா வெளியேறினார்

இந்த வாரம் ஐஷு, விஜய் வர்மா, மாயா, வினுஷா, விசித்ரா, பூர்ணிமா, பிரதீப் ஆண்டனி, விக்ரம், நிக்ஸன், மணிசந்திரா, அக்‌ஷயா உள்ளிட்ட 11 பேர் நாமினேட் ஆன நிலையில், ரொம்பவே கம்மியாக ஓட்டுக்களை பெற்று விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக சனிக்கிழமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே வழக்கம் போல இணையத்தில் ரகசியம் லீக் ஆகிவிட்டது.

விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறிவிட்டால் இனிமேல் பிக் பாஸ் வீட்டில் சண்டையே இருக்காதே, அவர் தான் கொஞ்சம் என்டர்டெயின் இந்த வாரம் செய்தார், அவரையும் அனுப்பி விட்டு யுகேந்திரன், விசித்ரா, கூல் சுரேஷை வைத்து கடைசி வரை ஷோ நடத்தப் போறாங்களா? என விஜய் வர்மாவின் வெளியே உள்ள புள்ளிங்கோ கமெண்ட் போட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...