Connect with us

விஜய்யின் வாரிசுக்கு வந்த தலைவலி ! பொங்கலுக்கு போட்டியாக களமிறங்கும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் !

62e579de16635

பொழுதுபோக்கு

விஜய்யின் வாரிசுக்கு வந்த தலைவலி ! பொங்கலுக்கு போட்டியாக களமிறங்கும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் !

சினிமா துறைக்கும் விசேஷ நாட்களுக்கும் ஒரு பொருத்தம் எப்போதுமே உள்ளது, விசேஷ நாட்களில் தான் முன்னணி ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வந்து அந்த நாட்களை மேலும் சிறப்பாக மாற்றி கொண்டாத்தை அதிகரித்து வரும். அந்த வகையில் வரும் பொங்கலுக்கு மோத உள்ள முன்னணி ஹீரோக்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

வாரிசு : நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து , அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரயுள்ளது.

ajith kumar vs vijay whos the bigger star

அஜித் 61 :நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இணைய உள்ளார்.

படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது,முதலில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போழுது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடியாததால் பொங்கலுக்கு வெளியிட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர் படக்குழு.

download 72

ஹரிஹர வீர மல்லு : இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தான் ஹரிஹர வீர மல்லு, தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கிரீஸ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார். பவன் கல்யாணுடன் இவருக்கு இதுதான் முதல் படம்.

போலா ஷங்கர் :மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் ‘போலா ஷங்கர்’ . தமிழில் அஜித் நடித்து வெளிவந்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படம் தான்போலா ஷங்கர். இந்த படத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அஜித்துக்கு இது தேவையா ? இன்சூரன்ஸ் இல்லாத பைக் – வைரலாக போட்டோஸ்!

studio project 40 2 16328247173x2 1

ஆதி புருஷ் : தெலுங்கில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார்,தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

1006883 prabhas adipurush 1

ஓம் ராவது இயக்கத்தில் பிரபாஸ், சையஃப் அலிகான், கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் ராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top