தளபதி விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா? வாரிசு படத்தினால் சோகத்தில் படக்குழு!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vaarisu 1

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறார்.

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்! சோஷியல் மீடியாவில் வெளியிட்ட கைகோர்த்த புகைப்படம்!

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு விநியோகஸ்த உரிமையை இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு 80 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 80 கோடிக்கு மேல் விற்ப்பனை செய்யப்பட்டது,ஆனால் பீஸ்ட் திரைப்படம் அறுபது கோடி மட்டுமே ஷேர் செய்துள்ளனர்.

வேகமாக தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு! லீக்கான போட்டோஸ்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment