பிக் பாஸ் பிரதீப்பின் ரெட் கார்டு சம்பவத்திற்குப் பிறகு விஜய் டிவி செய்த செயல்… என்னவா இருக்கும்…?

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமானது பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்து விட்ட நிலையில், இறுதியாக நடந்த ஏழாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் பிரதீப். ஏற்கனவே பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் கவினின் நண்பரான பிரதீப், அதிதி பாலன் நடிப்பில் வெளியான அருவி படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘வாழ்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற டாடா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வந்த பிரதீப், தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஏழில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய எதார்த்தமான, முகத்துக்கு நேராக பேசும் விதத்திலும், அவரின் வெகுளித்தனமான சிரிப்பிற்காகவும் பிரதீப் ஆர்மி என்று ஆரம்பித்து அவரைக் கொண்டாடினர். அந்த சீசனே ப்ரதீபால் ட்ரெண்டிங் ஆனது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. சில சந்தர்பங்களால் பிரதீபிற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதையும் சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்டார் பிரதீப்.

அங்குள்ள போட்டியாளர்கள் இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை, அதனால் உமனைசர் என்று கூறி வெளியனுப்பி விட்டனர். இந்த சம்பவத்தைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்களும் சரி பிரதீப்பின் ரசிகர்களும் சரி கொந்தளித்து விட்டனர். பிரதீப் அப்படிபட்டவர் இல்லை, இது விஜய் டிவியின் சதி என்றும் மைண்ட் கேம் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமலஹாசனையும் விட்டு வைக்காமல் அவர் இந்த நிகழ்ச்சியை நடத்த தகுதியற்றவர் என்று ரசிகர்கள் திட்டி தீர்த்துவிட்டார்கள்.

எனினும் விஜய் டிவி அதையே சாதகமாக ஆக்கி கொண்டு மீதி பாதி நிகழ்ச்சியை பிரதீப்பின் பெயரை வைத்தே முடித்து விட்டது. பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இல்லை என்றாலும் இறுதி வரை அவர் பெயர் போட்டியாளர்கள் மூலமாக ஒலித்து கொண்டிருந்தது. பிக் பாஸ் பைனல் எபிஸோடிலும் அதன் பின்பு பிக் பாஸ் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் அவர் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய பிரதீப்பிற்கு பிறந்தநாள் பரிசு ஒன்றை விஜய் டிவி அனுப்பியுள்ளது. அவர் பிறந்தநாளுக்காக விஜய் டிவியில் இருந்து அனுப்ப பட்ட பொக்கேயை படம் பிடித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரதீப். இதனால் ரெட் கார்ட் பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கலாம், இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரதீப்பை காண வாய்ப்பிருக்கும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.