பிக்பாஸில் இருந்து வெளியேறிய தாமரை செல்விக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி….!

விஜய் டிவியில் ஒருமுறை நுழைந்து விட்டால் அவர்களை அடுத்தடுத்து ஏதேனும் ஒரு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து விடுவார்கள். அந்த வகையில் பலர் தற்போது விஜய் டிவியில் இருந்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் பிக்பாஸில் பங்கேற்ற தாமரை செல்வியும் இடம்பிடித்துள்ளார்.

அதன்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ல் பங்கேற்றவர் தான் தாமரை செல்வி. இத்தனை நாட்கள் தாக்குப்படித்த தாமரை செல்வி இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சி முடிந்ததும். ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள தாமரை செல்வி அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரை தாமரை செல்வி போட்டியாளர்களுக்கு நன்றாக சமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இவர் இந்த சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் தவிர நடிகர் மனோபலா, ஷிவானி நாராயணன், பாடகி கிரேஸ், நடிகை விதுலேகா ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment