மீண்டும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், முதலில் சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கியவர்,விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிவகார்த்திகேயன். பின்னர் விஜய் டிவியின் அது இது எது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.

maxresdefault 6

ஒரு தொகுப்பாளருக்கு இவ்வளவு ரசிகர்களா என வியக்க வைக்கும் அளவுக்கு ரசிகர்களிடமிருந்து அவருக்கு கிடைத்த வரவேற்பு.சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்,தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

images 21

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. இந்த படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

samayam tamil

அடுத்ததாக மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். எவ்வளவு பிசியாக நடித்து வந்தாலும் விஜய் டிவியை சிவகார்த்திகேயன் மறப்பதில்லை. விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சிறப்பு விருந்தினராக கலந்து வழக்கம்.

டில்லி பயணம் வென்ற ரஜினி! காரணம் என்னவாக இருக்கும்?

கடந்த ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியாளர்களுடன் அனைவரையும் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment