“தமிழ்நாட்டின் நாளைய முதல்வர் விஜய்” – ஒட்டப்பட்ட போஸ்டரால் தேனியில் பரபரப்பு!!

நடிகர் விஜய் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆனதை வரவேற்கும் வகையில் “தமிழ்நாட்டின் நாளைய முதல்வரே” என போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதனை கொண்டாடும் விதமாக தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் நாளைய முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் அரசியல் கட்சிக்கு மத்தியில் முதல்வராக திகழ வேண்டும் என்றும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்க வேண்டும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் தமிழகத்தின் நாளைய அமைச்சர் என்றும் நிர்வாகிகள் அனைவரும் நாளைய சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற வாசகங்கள் அடங்கி போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர்.

மேலும், தற்போது நிழவி வரும் அரசியல் சூழலில் தேனி முழுவதும் ஒட்டிய போஸ்டர் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.