தளபதி 68 படத்தில் கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு இல்லை.. சென்டிமென்டாக வெங்கட் பிரபு எடுக்கும் முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதனாலேயே இவரை அரசியலிலும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் லியோ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மாஸ்டர் படத்தின் வெற்றி இந்த படத்திலும் அதிகமாகவே இருக்கின்றது. லியோ படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அக்டோபர் மாதம் இந்த படத்தை வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென தளபதி 68 படம் வெங்கட் பிரபுவிடம் கைமாறியது. அதைப் பற்றிய அப்டேட் தான் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபுவின் படம் என்றால் அவருக்கு என்று ஒரு தனி கூட்டணி அமைப்பு இருக்கும். அதாவது அவருடைய தம்பியான பிரேம்ஜி அந்த படத்தில் கண்டிப்பாக இருப்பார் மற்றும் யுவன் சங்கர் ராஜா தான் படத்திற்கு இசையமைப்பார்.

ஆனால் விஜயின் 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் இது வெங்கட் பிரபுவின் விருப்பமாக இருக்காது எனவும் விஜயின் விருப்பம் கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. அதனால் எப்பவும் போல அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று தெரிகிறது. ஆனால் பிரேம்ஜி இருப்பார் என்றும் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கிய அத்தனை படங்களிலும் பிரேம்ஜி இருப்பதனாலேயே அது ஒரு சென்டிமெண்ட்டாக வெங்கட்பிரபு கருதுகிறார் என்று கூறுகிறார்கள். மேலும் அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகி இருப்பதால் விஜயின் படத்திற்கும் பிரேம்ஜி இருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews