25வது பிறந்த நாள்: வாழ்த்து மழையில் நனையும் நடிகர் விஜயின் தங்கச்சி!

பொதுவாக சினிமாவில் நிற்க வேண்டும் என்றால் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்னர் ஒவ்வொரு விடாமுயற்சியினால் பெரிய நிலைக்கு வரமுடியும்.நிவேதா தாமஸ்

அதேபோல் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக, தங்கச்சி கதாபாத்திரம் இப்படி பல கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக மாறியுள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொங்கலன்று வெளியான தர்பார் திரை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்து தமிழகத்தில் பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தார் நிவேதா தாமஸ்.

இவர் தற்போது மலையாளத்தில் நட்சத்திரமாக விளங்குகிறார். இந்த நிலையில் இவருக்கு நாளைய தினம் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஏராளமான வாழ்த்துக்கள் இவருக்கு வந்த வண்ணமாக உள்ளன.

ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இவருக்கு தமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment