சன் டிவியில் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

f19e78922cb2686f40eed822cf26cf0c

விஜய் சேதுபதி நடித்த லாபம் என்ற திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய அடுத்த படமான துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன், சத்யராஜ், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்த திரைப்படம் துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது

இந்த படம் ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

செப்டம்பர் 9-ஆம் தேதி லாபம் செப்டம்பர் 10-ஆம் தேதி துக்ளக் தர்பார் என அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விஜய் சேதுபதி திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.