Connect with us

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஓடிடி ரிலீஸ் – எந்த நடிகரின் ஓடிடி தளத்தில் தெரியுமா?

maamani 3 1536x960 1

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஓடிடி ரிலீஸ் – எந்த நடிகரின் ஓடிடி தளத்தில் தெரியுமா?

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.இந்த படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

maamanithan 1 1 16560491703x2 1

இந்தப் படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் ஷங்கர், பாரதிராஜா, மிஷ்கின் உள்ளிட்டோர் இயக்குநர் சீனுராமசாமியை பாராட்டியாது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது.

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலை வெளியிட்ட லோகேஷ்!

இந்தப் படம் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மாமனிதன் திரைப்படத்தை ஆஹா இணைய வழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை ட்விட்டரில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும் ஒரு இப்படைப்பாக் காணவேண்டுமென விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top