Entertainment
குறளரசனை வாழ்த்திய விஜய் சேதுபதி
தமிழின் அஷ்டாவதானி என போற்றப்படுபவர் டி.ராஜேந்தர் இவரின் எல்லா படங்களிலுமே படத்தின் பெரும்பாலான வேலைகளை செய்வார் இயக்கம் இசை என எல்லா விஷயங்களையும் கையில் எடுக்கும் டி.ஆரை தெரியாதோர் யாரும் இருக்க முடியாது.

இவரின் மகன்கள்தான் சிம்பு மற்றும் குறளரசன். சிம்பு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு காதல் அவருக்கு தோல்வியானது. இருப்பினும் அவரது தம்பியான குறளரசனும் காதலித்து வந்த நிலையில் அவரது காதல் வெற்றியானது.
இஸ்லாமிய பெண்ணை காதலித்த குறளரசனுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.
நபீலா என்ற பெண்ணை குறளரசன் இரண்டு தினங்களுக்கு முன் மணந்தார். இதற்கான அழைப்பிதழை சினிமா பிரபலங்கள் அனைவரையும் சந்தித்து வழங்கிய டி.ஆர் அனைவரையும் வருமாறு நேரில் சென்று அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று சினிமா கலைஞர்கள் நேரில் சென்று குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்று மணமக்களை நேரில் வாழ்த்தினார்.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோ என அழைக்கப்படும் விஜய் சேதுபதியும் குறளரசனின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
