ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்திற்கு இடிமுழக்கம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த டைட்டிலை விஜய் சேதுபதி, உதயநிதி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நாயகியாக நடிகை காயத்ரி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விஜய் சேதுபதி, உதயநிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜீவி பிரகாஷ், சீனு ராமசாமி ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இடிமுழக்கம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் முதல் முறையாக ஆக்ஷன் படத்தை சீனுராமசாமி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Happy to launch @kalaimagan20 ’s @SkymanFilms production NO 2 title look #IdiMuzhakkam #இடிமுழக்கம்
Best wishes to entire team.@seenuramasamy @gvprakash @SGayathrie @NRRaghunanthan @vairamuthu @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/2UwjIlKPsQ
— Udhay (@Udhaystalin) August 11, 2021